கடந்த வருடம் 1,540 நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்களை நடத்தியுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

நுகர்வோர் விவகார அதிகாரசபையின் வரலாற்றில், ஒரு வருடத்தில் பதிவு செய்யப்பட்ட அதிக எண்ணிக்கையிலான நிகழ்ச்சித்திட்டங்கள் இதுவென தெரிவித்துள்ளது.

நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில், இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம், அதிகாரிகள் 120,000க்கும் மேற்பட்ட மக்களை நேரடியாகச் சந்தித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், நுகர்வோர் மற்றும் வர்த்தகர்களுக்கான விழிப்புணர்வானது, மின்னணு, டிஜிட்டல் மற்றும் அச்சு ஊடகங்கள் மூலம் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அந்த சபைத் தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தில் பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் வர்த்தக சமூகத்தை இலக்காகக் கொண்டு இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்களை மேலும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாகவும் நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.