நெடுந்தீவுக்கான படகுகள் சேவைகள் இன்றி, பயணிகள் பெரும் இடர்களை சந்தித்து வரும் நிலையில், வடதாரகையை இயக்குவதற்கு  விரைந்து நடவடிக்கை எடுப்பதாக கடற்படை வடபிராந்திய கட்டளை தளபதி நெடுந்தீவு பிரதேச செயலரிடம் உறுதி அளித்துள்ளார்.

நெடுந்தீவு பிரதேச செயலர் என்.பிரபாகரன், கடற்படையின் வடபிராந்திய கட்டளை தளபதி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு செவ்வாய்க்கிழமை (20) கடற்படை தளத்தில் இடம்பெற்றது. அதன் போதே வட தாரகையை இயக்குவது தொடர்பில் உறுதி அளித்தார்.