கட்டுநாயக்க பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆடிஅம்பலம் பகுதியிலுள்ள பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ பரவலில் ஒருவர் காயமடைந்துள்ளதாக கட்டுநாயக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த தீ பரவல் நேற்று புதன்கிழமை (11) பதிவானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீ பரவலில் காயமடைந்தவர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காயமடைந்தவர் மஹியங்கனை பகுதியை சேர்ந்த 35 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.கட்டுநாயக்க பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
தீ பரவல் ஏற்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், இந்த சம்பவம் குறித்து கட்டுநாயக்க பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பட்டாசு தொழிற்சாலையில் தீ பரவல் : ஒருவர் காயம்!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space