கடந்த 6 வருடங்களாக தாமதிக்கப்பட்டுள்ள பதவி உயர்வுகள் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட சுங்க தொழிற்சங்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
இவ்விடயம் குறித்த மேலதிக விபரங்கள் வருமாறு:
தமது பிரச்சினைகள் குறித்து பலமுறை அதிகாரிகளுக்கு அறிவித்தும் இதுவரை முறையான தீர்வுகள் வழங்கப்படவில்லை என சுங்க தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, இன்று செவ்வாய்க்கிழமை (24) முதல் நாடு முழுவதுமுள்ள அனைத்து சுங்க அலுவலகங்களிலும் கறுப்புப் பட்டிகளை அணிந்து கடமைகளில் ஈடுபட அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக எதிர்வரும் 26 ஆம் திகதி நிதி அமைச்சு, அரச சேவை ஆணைக்குழு உள்ளிட்ட பல தரப்புகளுடன் விசேட பேச்சுவார்த்தையொன்று நடைபெறவுள்ளது.
குறித்த பேச்சுவார்த்தையின் முடிவுகளின் அடிப்படையில், எதிர்வரும் வெள்ளிக்கிழமை சுங்க தொழிற்சங்க கூட்டமைப்பின் பிரதிநிதிகள் கூடி, தமது தொழிற்சங்க நடவடிக்கையின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து சுங்க அதிகாரிகள் தொழிற்சங்க நடவடிக்கை!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space