கொழும்பு - ஹைலெவல் வீதியின் பன்னிப்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பன்னிப்பிட்டிய பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகிலேயே இந்த விபத்து இன்று செவ்வாய்க்கிழமை (24) காலை இடம்பெற்றுள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்து வீதிக்குள் நுழைய முயன்ற முச்சக்கரவண்டியின் மீது மோதாமல் தவிர்க்க முயற்சித்த பஸ், வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் பஸ்ஸில் பயணித்தவர்கள் காயமடைந்ததுடன், அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலும், காயமடைந்தவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், ஏனைய இருவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பன்னிப்பிட்டிய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
பன்னிப்பிட்டியவில் பேருந்து - லொறி மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு, மூவர் காயம்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space