பயணிகள் பேருந்தில் மண்ணெண்ணெய் கடத்தல்: நடத்துனர் கைது!
Ad Space
Ad Space
கொழும்பிலிருந்து மொனராகலை நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பஸ் ஒன்றிலிருந்து 100 லீற்றர் மண்ணெண்ணெயை வெல்லவாய பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த பஸ்ஸில் சட்டவிரோதமான முறையில் மண்ணெண்ணெய் கொண்டு செல்லப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, பஸ் நடத்துனர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் வெல்லவாய பொலிஸ் நிலைய அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தனர்.
Ad Space
Ad Space