கிளிநொச்சி மாவட்டத்தின் பரந்தன் பகுதியில் அமைந்துள்ள பரந்தன் இரசாயன நிறுவனத்தின் பிரதான உற்பத்தி ஆலையின் நிர்மாணப் பணிகள் புதன்கிழமை (21) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டன.
இந்த நிகழ்வு கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் ஹந்துன்நெத்தி தலைமையில், பரந்தன் இரசாயன நிறுவனத்தின் பிரதான உற்பத்தி ஆலை வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் ஹந்துன்நெத்தி, பரந்தன் இரசாயன நிறுவனத்தை மீளச் செயல்படுத்துவது நாட்டின் தொழில்துறை வளர்ச்சிக்கும், உள்நாட்டு உற்பத்தி வலுப்படுத்தலுக்கும் முக்கிய பங்காற்றும் எனக் குறிப்பிட்டார். குறிப்பாக, இரசாயன உற்பத்தியில் இறக்குமதி சார்பை குறைத்து, உள்ளூர் தேவைகளை பூர்த்தி செய்வதோடு, வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
இந்த உற்பத்தி ஆலை நிர்மாணம் நிறைவடைந்த பின்னர், விவசாயம், தொழில்துறை மற்றும் ஏற்றுமதி துறைகளுக்குத் தேவையான முக்கிய இரசாயனப் பொருட்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், இந்தத் திட்டம் வடக்கு மாகாணத்தின் பொருளாதார மீட்சி மற்றும் பிராந்திய அபிவிருத்திக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
நிகழ்வில் அரச அதிகாரிகள், பரந்தன் இரசாயன நிறுவனத்தின் உயர் அதிகாரிகள், உள்ளூர் அரசியல் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பரந்தன் இரசாயன நிறுவனத்தின் பிரதான உற்பத்தி ஆலை நிர்மாணப் பணிகள் ஆரம்பம்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space