இலங்கையின் நிர்வாக கட்டமைப்பில் தற்போது அமுலில் உள்ள சட்டங்கள், விதிமுறைகள் மற்றும் ஒழுங்குவிதிகள் ஆகியவற்றை தற்போதைய டிஜிட்டல் யுகத்துக்கு பொருந்தும் வகையில் மறுசீரமைக்கப்படும். பழமைவாய்ந்த சட்டங்கள் அனைத்தையும் இரத்துச் செய்ய போவதில்லை. அவற்றின் தனித்துவத்துக்கு சட்ட மறுசீரமைப்பில் முன்னுரிமையளிக்கப்படும் என பொதுநிர்வாகம், மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்றங்கள் அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.
இலங்கையின் நிர்வாக கட்டமைப்பில் தற்போது அமுலில் உள்ள சட்டங்கள், விதிமுறைகள் மற்றும் ஒழுங்குவிதிகள் ஆகியவற்றை தற்போதைய டிஜிட்டல் யுகத்துக்கு பொருந்தும் வகையில் மறுசீரமைக்க மற்றும் அரச சேவையை வினைத்திறனாக்க, வெளிப்படைத்தன்மை மற்றும் பொதுமக்கள் பொறுப்பினை உறுதிப்படுத்துவதை இலக்காகக் கொண்டு ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்திக் கருத்திட்டத்தின் முழுமையான ஒத்துழைப்புடனான அரச சேவையாளர்களுக்கு சட்டம் மறுசீரமைப்பை அறிமுகப்படுத்தும் ஆரம்ப நிகழ்ச்சிக்கான நிகழ்வு பொதுநிர்வாகம், மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்றங்கள் அமைச்சர் சந்தன அபேரத்ன தலைமையில் நேற்று முன்தினம் கொழும்பில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் உரையாற்றிய பொதுநிர்வாகம்,மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்றங்கள் அமைச்சர் சந்தன அபேரத்ன,
ஜனாதிபதித் தiமையிலான அமைச்சரவையில் இந்த சட்ட மறுசீரமைப்பு குறித்து இரண்டு முறை அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள பெரும்பாலான சட்டங்கள் பிரித்தானிய ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்டது.அந்த சட்டங்கள் பல குறைப்பாடுகளுடன் தான் இயற்றப்பட்டுள்ளன.பழைய சட்டங்கள் என்று அனைத்தையும் இரத்துச் செய்ய முடியாது. அவற்றின் சிறந்த உள்ளடக்கங்கள் நாட்டுக்கு தேவையாகும்.தற்போதைய நடைமுறைக்கு அமைய மறுசீரமைக்கப்பட வேண்டிய சட்டங்கள், விதிமுறைகள் மற்றும் ஒழுங்குவதிகள் முறையாக மறுசீரமைக்கப்படும்.
சுதந்திரத்தின் பின்னர் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் நாடு புதிய திசையில் செல்ல வேண்டும் என்று தீர்மானித்து 2024 ஆம் ஆண்டு ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தினார்கள்.பொருளாதார மேம்பாடு மற்றும் இன நல்லிணக்கம் எதிர்காலத்தை சிறந்த நிலைக்கு கொண்டு செல்லும்.நடைமுறைக்கு சாத்தியமான வகையில் புதிய சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். அதேபோல் நடைமுறையில் உள்ள சட்டங்கள் மறுசீரமைக்கப்பட வேண்டும் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம் என்றார்.
பழமைவாய்ந்த சட்டங்கள் அனைத்தையும் இரத்துச் செய்ய போவதில்லை ; சந்தன அபேரத்ன
Ad Space
Ad Space
Ad Space
Ad Space