உலக நாடுகள் வயது குறைந்த மாணவர்கள் சமூகவலைத்தலத்துக்கு பிரவேசிப்பதை தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வரும்போது, இலங்கையில் பாடப்புத்தகத்தில் வலைத்தலங்களை பதிவிட்டு அதன்பால் தூண்டப்பட்டு வருகிறது. இது எதிர்கால சந்ததியினரை ஒழுக்கமற்ற சமூகத்தின் பால் இட்டுச்செல்லும் என்பதை அரசாங்கத்துக்கு தெரிவித்துக்கொள்கிறோம் என பாலின நோய்கள் மற்றும் எச்.ஐ.வி நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணரும் சிறிலங்கா கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளருமான வைத்தியர் ஜீ. வீரசிங்க தெரிவித்தார்.
சிறிலங்கா கம்யூனிஸ்ட் கட்சி காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (13) இடம்பெற்ற பெய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,
இலங்கையில் கடந்த 5வருடங்களில் எச்.ஐ.வி. நோய் அதிகரித்துள்ளது. இவ்வாறு அதிகரிக்கப்பட்டிருப்பது ஆண்களிடமாகும். பொதுவாக 7பேரிடம் எச்.ஐ.வி. நோய் அடையாள காணப்பட்டால் அதில் பெண் ஒருவரே இருப்பார்.இந்த எச்.ஐ.வி. நோய் அதிகரிப்பதற்கான காரணம் தொடர்பில் ஆராய்ந்து பார்த்தபோது, ஒரு ஆண் இன்னுமொரு ஆணுடன் பாலின தொடர்புகளை அதிகரித்திருப்பதாகும்.
2021ஆம் ஆண்டில் 15 வயதுக்கும் 24 வயதுக்கும் இடைப்பட்டவர்களில் 52 ஆண்களும் 7 பெண்களும் எச்.ஐ.வி. நோய்க்கு ஆளாகி இருக்கிறார்கள். 2022ஆம் ஆண்டு இந்த வயதுக்கிடைப்பட்டவர்களில் 68 ஆண்களும் 6 பெண்களும் எச்.ஐ.வி. நோய்க்குள்ளாகி இருக்கிறார்கள். 2023 இந்த எண்ணிக்கை அதிகரித்து ஆண்கள் 93பேரும் 12 பெண்களும் தொற்றுக்குள்ளாகி இருக்கிறார்கள். 2024ஆம் ஆண்டில் ஆண்கள் 101 அதிகரிக்கும்போது பெண்கள் 12பேர் பதிவாகி இருக்கிறார்கள்.
15 வயதுக்கும் 24 வயதுக்கும் இடையில் அதிகமான பாடசாலை மாணவர்கள் இருக்கிறார்கள் என்பதை நாங்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஆண் பாலின ஓரின சேர்க்கை மூலமே இலங்கையில் எச்.ஐ.வி. நோய் தொற்று அதிகரித்து வருகிறது என்பது உண்மையான அறிக்கையாகும்.
ஒவ்வொருவருக்கும் தொடர்புகளை வைத்துக்கொள்ள உரிமை இருக்கலாம். ஆனால் இதனை அபிவிருத்தி செய்ய முடியாது. ஆனால் கடந்த காலங்களில் இதனை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகள் இடம்பெற்றன. சுற்றுலாத்துறை அதிகாரசபையில் இவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெற்றன. அதனடிப்படையிலே தற்போது பாடப்புத்தகத்திலும் ஓரின சேர்க்கை சம்பந்தமான வலைத்தல முகவரிகள் பதிவிட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எமக்கு எழுகிறது.
அதேநேரம் அரசாங்கத்துக்கு நாங்கள் சொல்லிக்கொள்ள விரும்புவது, உலக நாடுகளான அமெரிக்கா, பிரித்தானியா அவுஸ்திரேலியா மற்றும் ஆசியாவில் இந்தியா, பாகிஸ்தான் மலேசியா போன்ற நாடுகள் வயது குறைந்த , மாணவர்கள் சமூகவலைத்தலத்துக்கு பிரவேசிப்பதை தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வரும்போது, இலங்கையில் பாடப்புத்தகத்தில் வலைத்தலங்களை பதிவிட்டு அதன்பால் தூண்டப்பட்டு வருகிறது. இது எமது எதிர்கால சிறுவர்களை நாகரிகமற்ற ஒரு சமூகத்தை நோக்கி இட்டுச்செல்லும் என்றார்.
பாடப்புத்தகங்களில் சமூக வலைத்தளங்கள்: எதிர்கால சந்ததிக்கு ஆபத்து - வைத்தியர் ஜீ. வீரசிங்க
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space