2008 ஆம் ஆண்டு முதல் 28 ஆண்டுகளாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மயக்க மருந்து விசேட மருத்துவ நிபுணராகச் சிறப்பாகக் கடமையாற்றிய யாழ் சாவகச்சேரியைச் சேர்ந்த பிரேமகிருஷ்ணா வெள்ளிக்கிழமை (06.03.2026) மருத்துவ சேவையிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
இவர் மயக்க மருந்துப் பிரிவை ஒழுங்குபடுத்திக் குழு ஒருமைப்பாட்டை உருவாக்கியதுடன் பாதுகாப்பான சத்திரசிகிச்சைச் சேவைகள் நடைபெற முக்கிய பங்காற்றினார். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் பொருளாளராகப் பணியாற்றி நோயாளிகளுக்கும், அவர்களின் உறவினர்களுக்கும் பல்வேறு உதவித் திட்டங்களை அறிமுகப்படுத்தினார். தொலைதூரத்திலிருந்து வரும் நோயாளிகளின் உறவினர்கள் தங்குவதற்கான வசதிகளை ஏற்படுத்துவதிலும் பங்காற்றினார்.
பிரபல மருத்துவ நிபுணர் பிரேமகிருஷ்ணா ஓய்வு
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space