காணாமல்போன பெண் ஒருவரை கண்டுப்பிடிக்க, காவல் துறை பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.
பண்டாரவளை - அட்டம்பிட்டிய, ஊவா ஹைலண்ட்ஸ் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், காணாமல் போயுள்ளார்.
குடும்பத் தகராறு காரணமாக, கடந்த நவம்பர் 16ஆம் திகதி குறித்த பெண் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
காணாமல் போனவர் பற்றிய விபரங்கள்
பெயர் - புவனநாதன் பவித்ரா ஜீவந்தி ஹேரத்
வயது - 33
முகவரி - ஊவா ஹைலண்ட்ஸ், பண்டாரவளை
இந்த சம்பவம் தொடர்பில் வெலிமடை நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த நபர் தொடர்பான தகவல்கள் தெரிந்தால் அறியப்படுத்துமாறு, பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
தொலைபேசி இலக்கங்கள்
அட்டம்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி - 071-8591528
அட்டம்பிட்டிய பொலிஸ் நிலையம் - 055-2294965
புகைப்படத்தில் உள்ள பெண் மாயம் : தகவல் தெரிந்தால் காவல் துறைக்கு அறிவிக்கவும்!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space