புரட்சி அண்ணா திமுக என்ற பெயரில் புதிய கட்சியை பெங்களூரு புகழேந்தி தொடங்கியுள்ளார். அதிமுகவை அனைத்து தொகுதிகளிலும் நாங்கள் டெபாசிட் இழக்கச் செய்வோம் என்று அவர் கூறியுள்ளார்.
அதிமுகவில் சசிகலாவின் தீவிர ஆதரவாளராக பெங்களூரு புகழேந்தி இருந்தார். அவர் சிறைக்கு சென்ற பிறகு டிடிவி அணிக்கு சென்றார். அமமுக-வில் கர்நாடக மாநிலச் செயலாளராகவும் இருந்தார். பின்னர் டிடிவி தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அதிலிருந்து விலகி ஓபிஎஸ் அணியில் இணைந்தார். சமீபத்தில் ஓபிஎஸ் திமுகவில் இணைந்ததை விமர்சித்த புகழேந்தி "புரட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்" என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘‘அதிமுக போட்டியிட வேண்டிய இடங்களைக் கேட்டு டெல்லியில் பாஜக தலைவர்களிடம் பழனிசாமி கெஞ்சுகிறார். தன்மானத்தை அடகு வைத்துவிட்டு தேர்தலை சந்திக்கும் பழனிசாமியின் அதிமுக அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழக்க புஅதிமுக காரணமாக இருக்கும். தேவைப்பட்டால் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம். காலம் குறுகியிருப்பதால் பொதுக்குழுவினை கூட்டி யாருடன் கூட்டணி என்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும்’’ என்றார்.
புதிய கட்சி தொடங்கிய பெங்களூரு புகழேந்தி
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space