பூனையை சித்திரவதை செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இளைஞனை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வலப்பனை நீதவான் நீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை (8) உத்தரவிட்டுள்ளது.
திப்படுகொட பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞனே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இளைஞன் ஒருவன் பூனை ஒன்றை சித்திரவதை செய்யும் காணொளி ஒன்று அண்மையில் சமூக ஊடகங்களில் பரவி வந்துள்ளன.
இந்த காணொளிக்கு விலங்குகள் பாதுகாப்பு தொடர்பான அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.
இதனையடுத்து இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபரான இளைஞன் ஞாயிற்றுக்கிழமை (8) வலப்பனை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட இளைஞன் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பூனையை சித்திரவதை செய்யும் காணொளி - இளைஞனுக்கு விளக்கமறியல்!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space