கொழும்பு - கிராண்ட்பாஸ், ஸ்டேஸ்புர பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கொழும்பு வடக்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தினரால் நேற்று புதன்கிழமை (21) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு வடக்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தினருக்கு கிடைத்த தகவலின் பேரில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 213 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர் கொழும்பு 14ஐச் சேர்ந்த 42 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.கைதுசெய்யப்பட்டவர் கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலையத்தில் அவர் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.