மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட மாங்காடு விதானையார் வீதி கடந்த 40 வருடங்களாக கவனிப்பாரற்ற நிலையில் பற்றைக்காடாக காணப்பட்டு வந்துள்ளது.
இதனால் அப்பிரதேசத்தில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகள் பல சவால்களை எதிர்கொண்டு வந்த நிலையில், மேற்படி விடயம் தொடர்பில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளரிடம் அப்பகுதி மக்கள் எடுத்துக் கூறியதையடுத்து இவ் வீதியியை ஜேசி.பி இயந்திரம் மூலம் துப்பரவு செய்து, பாவனைக்குரிய வீதியாக செப்பனிடும்பணி புதன்கிழமை (28) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது அப்பகுதி பொதுமக்கள் பிரதேச சபையின் இந்த செயற்பாட்டிற்கு நன்றியையும் தெரிவித்துள்ளனர்.
அப்பகுதியிலுள்ள சுமார் 150 மேற்பட்ட விவசாயிகளின் மிக நீண்ட நாள் கோரிக்கையாக அமைந்த இந்த பாதை விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்படுகின்றதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
மட்டக்களப்பில் 40 வருடங்களாக காடாக இருந்த மாங்காடு விதானையார் வீதி மீண்டும் திறப்பு
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space