பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 118 ஆவது பிறந்தநாள் விழா, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், சென்னை, வள்ளுவர்கோட்டத்தில் நாளை 15.09.2026 செவ்வாய்கிழமை மாலை 3 மணி அளவில் கழக அவைத் தலைவர் ஆட்டர் ஆ.அர்ஜூனராஜ் அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் நிறைவுப் பேருரை ஆற்றுகிறார்கள்.மலேசிய - பினாங்கு மாநில முன்னாள் துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி அவர்கள் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் நூல் மற்றும் குறுந்தகட்டை வெளியிட்டு சிறப்புறை ஆற்றுகிறார்.கழக முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி., துணைப் பொதுச்செயலாளர்கள் செஞ்சி ஏ.கே.மணி, டாக்டர் ரொகையா, டாக்டர் சி.கிருஷ்ணன், புதூர் மு.பூமிநாதன், சு.ஜீவன் எம்.சி., மற்றும் ஆடுதுறை முருகன்தென்சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் சைதை ப.சுப்பிரமணி எம்.சி அவர்கள் வரவேற்புரை ஆற்றுகிறார்.நெறியாள்கை: உயர்நிலைக்குழு உறுப்பினர் ஆவடி இரா.அந்திரிதாஸ்கழகப் பொருளாளர் மு.செந்திலதிபன் கருத்தரங்க தலைமை தாங்குகிறார்.ஆ.வந்தியத்தேவன், சிப்பிப்பாறை ஆ.இரவிச்சந்திரன், வழக்கறிஞர் எஸ்.வெற்றிவேல், காரை எஸ்.செல்வராஜ், வழக்கறிஞர் சு.குருநாதன், மல்லிகா தயாளன், ப.த.ஆசைத்தம்பி, பால சசிகுமார், வ.கோபால்ராசு, சந்திரா ஜெகநாதன் ஆகியோர் கருத்தரங்கத்தில் உரையாற்றுகிறார்கள்.ஆயிரம்விளக்கு பகுதிச் செயலாளர் சூளைமேடு குமார் நன்றியுரை ஆற்றுகிறார்.