மாளிகாவத்தை வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் சார்லஸ் நுகவெலவை பணி இடமாற்றம் செய்ய சுகாதார அமைச்சு அநிவித்துள்ள நிலையில் குறித்த பணி இடமாற்றத்தை மாற்றுவதற்கு எவரேனும் முயன்றால் அதற்கு எதிராக மீண்டும் தொடர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட நேரிடும் என அரசு கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் தலைவர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.
மாளிகாவத்தை சிறுநீரக வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளராகக் கடமையாற்றிய சார்லஸ் நுகவெல மேற்கொண்ட சட்டவிரோத மற்றும் ஒழுக்கமற்ற செயல்கள் தொடர்பாகப் பலமுறை முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இது தொடர்பில் அரசு கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கத்தினால் தொடர் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டதையடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
விசாரணையின் பிரகாரம், சுகாதார அமைச்சின் செயலாளரினால் மாளிகாவத்தை சிறுநீரக வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளராகக் கடமையாற்றிய சார்லஸ் நுகவெலவை பணி இடமாற்றம் செய்ய அறிவிக்கப்பட்டது.
ஆனால் அவர் அந்த பணி இடமாற்றத்தை ஏற்க மறுத்து, அல்லது வேறு ஏதேனும் ஒரு வழியில் மீண்டும் மாளிகாவத்தை சிறுநீரக வைத்தியசாலையிலேயே இணைந்துகொள்வதற்கு சிலர் முயற்சித்து வருவதாக தகவல்கள் பரவுகின்றன.
இந்த விடயம் குறித்து சுகாதார அமைச்சர், பிரதி அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோர் விசேட அவதானம் செலுத்த வேண்டும்.
குறித்த பணி இடமாற்றத்தை மாற்றுவதற்கு எவரேனும் முயற்சித்தால் அதற்கு எதிராக மீண்டும் தொடர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட நேரிடும் என அரசு கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் தலைவர் சானக தர்மவிக்ரம மேலும் தெரிவித்துள்ளார்.
மாளிகாவத்தை வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளரின் பணி இடமாற்றத்தை மாற்ற முயன்றால் மீண்டும் தொடர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட நேரிடும்!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space