மிஹிந்தலையில் பெண்களைத் தாக்கிய விமானப்படைச்சேர்ந்தவர் கைது!
Ad Space
Ad Space
காணியொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து பெண்கள் இருவரை தாக்கி காயப்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய விமானப்படை வீரர் ஒருவரை அநுராதபுரம் மிஹிந்தலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மிஹிந்தலை பொலிஸ் பிரிவின் பனாவெவ, சீப்புக்குளம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (19) மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளை நடத்திவரும் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் மிஹிந்தலை பொலிஸ் நிலையத்துக்கு கிடைத்த தகவலுக்க அமைய சந்தேக நபர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் 33 வயதுடையவர், சீப்புக்குளம், பனாவெவ பகுதியை வசிப்பிடமாகக் கொண்டவர் என ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மிஹிந்தலை பொலிஸார் நடத்தி வருவதோடு, விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர் அநுராதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Ad Space
Ad Space