மீசாலை வடக்கு கட்டு வைரவர் ஆலயத்தில் சிறப்பிக்கப்பட்ட வருடாந்த மாசிமக விரத உற்சவம்
Ad Space
Ad Space
பழமை வாய்ந்த யாழ் மீசாலை வடக்கு கட்டு வைரவர் ஆலய மாசிமக விரத உற்சவம் திங்கட்கிழமை (02.03.2026) சிறப்பாகவும், பக்திபூர்வமாகவும் நடைபெற்றது. காலை விசேட பொங்கலைத் தொடர்ந்து முற்பகல்-11.30 மணியளவில் வைரவப் பெருமானுக்கு விசேட அபிஷேகம் ஆரம்பமாகியது.
பிற்பகல்-01.15 மணியளவில் விசேட பூஜை, மடை வழிபாடுகளைத் தொடர்ந்து அடியவர்களுக்கு அன்னதானமும் பரிமாறப்பட்டது. ஆலயப் பிரதமகுரு நடேசன் குகநாதன் மாசிமக விரதப் பூஜை வழிபாடுகளை நிகழ்த்தினார்.
இதேவேளை, கிராமிய வழிபாடு இன்றுவரை அழியாது பின்பற்றப்பட்டு வருகின்ற ஈழத்து ஆலயங்களில் குறித்த ஆலயமும் ஒன்றாகத் திகழ்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
Ad Space
Ad Space