முறையற்ற வழிகளில் பெறப்பட்ட சிம் கார்ட்களைப்  பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் சட்டவிரோதச் செயல்கள் அதிகரித்துள்ளதாகத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு  தெரிவிமுறையற்ற வழிகளில் பெறப்பட்ட சிம் கார்ட்களைப்  பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் சட்டவிரோதச் செயல்கள் அதிகரித்துள்ளதாகத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு  தெரிவித்துள்ளது.நேற்று வியாழக்கிழமை (10) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பந்துல ஹேரத் இத் தகவலை வெளியிட்டுள்ளார்.கடந்த 2-3 ஆண்டுகளில் சிம் கார்ட்களைப் பயன்படுத்திச் செய்யப்படும் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் உள்ளிட்ட சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.இதற்காகச் சிம் கார்ட் விநியோக விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டின் இறுதிக்குள் புதிய சிம் கார்ட்களைப் பெறுபவர்கள் தங்களின் நேரடிப் புகைப்படத்தை  வழங்குவது கட்டாயமாக்கப்படவுள்ளது.2027 ஆம் ஆண்டிற்குள் நாட்டில் சிம் கார்ட்களைப் பயன்படுத்தும் அனைத்து வாடிக்கையாளர்களின் அடையாளத்தையும் 100% உறுதிப்படுத்தும்  வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.இப் புதிய நடைமுறையால் சாதாரண பொதுமக்களுக்கோ அல்லது நாட்டிற்கு வரும் வெளிநாட்டவர்களுக்கோ எவ்வித அசௌகரியங்களும் ஏற்படாது என உறுதியளிக்கப்பட்டுள்ளது.நாட்டில் சுமார் 30 மில்லியன்  சிம் கார்ட்கள் பயன்பாட்டில் உள்ள நிலையில், சேவையின் தரம் குறைவாக இருப்பதாகப் பொதுமக்கள் முறைப்பாடு செய்து வருகின்றனர். இதனைச் சரியாகக் கண்காணிப்பதற்கான அமைப்பொன்றை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.நேற்று வியாழக்கிழமை (10) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பந்துல ஹேரத் இத் தகவலை வெளியிட்டுள்ளார்.கடந்த 2-3 ஆண்டுகளில் சிம் கார்ட்களைப் பயன்படுத்திச் செய்யப்படும் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் உள்ளிட்ட சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.இதற்காகச் சிம் கார்ட் விநியோக விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டின் இறுதிக்குள் புதிய சிம் கார்ட்களைப் பெறுபவர்கள் தங்களின் நேரடிப் புகைப்படத்தை  வழங்குவது கட்டாயமாக்கப்படவுள்ளது.2027 ஆம் ஆண்டிற்குள் நாட்டில் சிம் கார்ட்களைப் பயன்படுத்தும் அனைத்து வாடிக்கையாளர்களின் அடையாளத்தையும் 100% உறுதிப்படுத்தும்  வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.இப் புதிய நடைமுறையால் சாதாரண பொதுமக்களுக்கோ அல்லது நாட்டிற்கு வரும் வெளிநாட்டவர்களுக்கோ எவ்வித அசௌகரியங்களும் ஏற்படாது என உறுதியளிக்கப்பட்டுள்ளது.நாட்டில் சுமார் 30 மில்லியன்  சிம் கார்ட்கள் பயன்பாட்டில் உள்ள நிலையில், சேவையின் தரம் குறைவாக இருப்பதாகப் பொதுமக்கள் முறைப்பாடு செய்து வருகின்றனர். இதனைச் சரியாகக் கண்காணிப்பதற்கான அமைப்பொன்றை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.