மெல்சிரிபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பேபுஸ்ஸ - திருகோணமலை பிரதான வீதியில் நாபெட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து நேற்று சனிக்கிழமை (10) காலை இடம்பெற்றுள்ளது.
தம்புள்ளையிலிருந்து குருநாகல் நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், முன்னால் பயணித்த லொறியின் பின்புறத்தில் மோதி எதிர் திசையில் வந்த மற்றுமொரு லொறியுடன் மோதி விபத்து நேர்ந்துள்ளது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றவர் பலத்த காயமடைந்து பொல்கொல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விபத்தில் உயிரிழந்தவர் மெல்சிரிபுர பகுதியைச் சேர்ந்த 51 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் பொல்கொல்ல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்துடன் தொடர்புடைய இரு லொறியிகளின் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மெல்சிரிபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மெல்சிரிபுர பகுதியில் விபத்து ; ஒருவர் உயிரிழப்பு
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space