கோனகங்கார - யால வனப்பகுதியின் 05ஆம் மண்டல பகுதியில், இரண்டு கஞ்சா செய்கைகள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளன.
பொலிஸ் விசேட அதிரடிப்படை புத்தள முகாமின் அதிகாரிகளால் வெள்ளிக்கிழமை (16) முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின்போதே குறித்த கஞ்சா செய்கைகள் சுற்றிவளைக்கப்பட்டன.
சுமார் 02 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட 80,660 கஞ்சா செடிகள் இதன்போது கைப்பற்றப்பட்டதுடன், ஆதாரத்திற்கு மாதிரிகளை எடுத்ததன் பின்னர், தீ வைத்து எரிக்கப்பட்டு அழிக்கப்பட்டன.
இதனுடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்ய கோனகங்கார பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யால வனப்பகுதியில் அதிரடி வேட்டை: 80,000 க்கும் மேற்பட்ட கஞ்சா செடிகள் அழிப்பு!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space