யாழில் இருந்து வவுனியா சென்ற வவுனியாவைச் சேர்ந்த யுவதி ஒருவரை காணவில்லை
Ad Space
Ad Space
யாழில் இருந்து வவுனியா சென்ற வவுனியாவைச் சேர்ந்த யுவதி ஒருவரை காணவில்லை என பெற்றோர் பொலிசில் முறைப்பாடு செய்துள்ளனர்.
குறித்த யுவதி கடந்த 27 ஆம் திகதி யாழ்பபணத்தில் இருந்து வவுனியா செல்வதாக சென்ற நிலையிலேயே காணாமல் போயுள்ளதாக காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தகவல் தெரிந்தோர் 0773828845 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா கற்பகபுரம் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய சுவந்தன் திவ்யா என்ற யுவதியே இவ்வாறு காணாமல் போனவர் ஆவார். இது தொடர்பில் காங்கேசன்துறை பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Ad Space
Ad Space