யாழில் சிறப்புற நிகழ்ந்தேறிய பசுமை அமைதி விருதுகள் வழங்கும் விழா
vidiyel 28 சித்திரை 2026 · 10:50 6 views
Ad Space
Ad Space
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் 2025 ஆம் ஆண்டுக்கான பசுமை அமைதி விருதுகள் வழங்கும் விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை (26.04.2026) பிற்பகல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தலைமையில் சிறப்புற நிகழ்ந்தேறியது.
நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர். திருநாவுக்கரசு வேல்நம்பி பிரதம விருந்தினராகவும், கிழக்கு மாகாணக் கால்நடை உற்பத்திச் சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் மருத்துவர் மு.அ.முகமது சுல்பீக்கர் அபூபக்கர், இயற்கைவழிச் செயற்பாட்டாளர் சி.சுந்தரேஸ்வரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொண்டிருந்தனர்.