யாழ்ப்பாணத்தில் சீனிப்பாணியை தூய தேன் எனவும் , கலப்பட நெய்யையும் விற்பனைக்கு வைத்திருந்த விற்பனையாளருக்கு எதிராக பொது சுகாதர பரிசோதகரால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
வல்வெட்டித்துறை பகுதியில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றில் பொது சுகாதார பரிசோதகர் தினேஷ் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது தூய தேன் என விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த தேன் போத்தல்களுக்குள் சீனிப்பாணியே காணப்பட்டதை கண்டறிந்து 19. 3/4 போத்தல் சீனிப்பாணி கரைசல்களை கைப்பற்றியுள்ளார்.
அதேவேளை தூய நெய் என விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 8, 1/4 போத்தல் நெய் போத்தல்களும் கலப்படம் நிறைந்தது என அவற்றையும் கைப்பற்றியுள்ளார்.
கைப்பற்றப்பட்ட சீனிப்பாணி கரைசல் மற்றும் கலப்பட நெய் என்பவற்றை விற்பனைக்கு வைத்திருந்தமை தொடர்பில் விற்பனையாளரிடம் வாக்கு மூலங்களை பதிவு செய்ய பொது சுகாதார பரிசோதகர் , விற்பனையாளருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார்.
யாழில் சீனிப்பாணி கரைசலை தேன் என விற்றவர் கைது!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space