யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின்  ஏற்பாட்டில் பேராசிரியர் ஆ.சதாசிவம் நூற்றாண்டு நினைவுப் பேருரை நிகழ்வு சனிக்கிழமை (14.02.2026) காலை-09 மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உயர் பட்டப்படிப்புகள் பீட மண்டபத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் கி.விசாகரூபன் தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வில் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கப் பெருந் தலைவரும், தகைசார் வாழ்நாள் பேராசிரியருமான அ.சண்முகதாஸ் கலந்து கொண்டு நினைவுப் பேருரை ஆற்றினார். யாழ்ப்பாணம் தேசியக் கல்வியியல் கல்லூரியின் விரிவுரையாளர்  ஞானசம்பந்தன் தமிழ்மொழி வாழ்த்து இசைத்தார். நிகழ்வுகளைத் தமிழ்ச் சங்க ஆட்சிக் குழு உறுப்பினர் யோ.நிவேதன் நெறிப்படுத்தினார்.