யாழ். பல்கலைக்கழகத்தின் பொங்கு தமிழ் பிரகடனத்தின் 25ஆம் ஆண்டு நிறைவு நாள் இன்று (17) சனிக்கிழமை நினைவு கூரப்பட்டது.
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர், விரிவுரையாளர்கள், மாணவர்கள், இணைந்து பல்கலைக்கழக கலைப்பீட வளாகத்திற்குள் உள்ள பொங்குதமிழ் நினைவு தூபி முன் கூடி பொங்குதமிழ் பிரகடன நிறைவு நாளை நினைவு கூர்ந்திருந்தனர். இதன்போது பொங்குதமிழ் பிரகடனம் வாசிக்கப்பட்டது.
இவ்வெழுச்சி நிகழ்வில் வைத்து தமிழ் மக்களின் அபிலாசைகளான சுயநிர்ணய உரிமை, மரபுவழித்தாயகம், தமிழ் தேசியம் என்பவை அங்கிகரிக்கப்பட வேண்டும் என்பவை பொங்குதமிழ் பிரகடனமாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது.
யாழ். பல்கலைக்கழகத்தில் 25ஆவது ஆண்டு பொங்குதமிழ் நினைவேந்தல்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space