விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று புதன்கிழமை (11) ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவின் லண்டன் விஜயம் குறித்து மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் சமன் ஏக்கநாயக்கவை கைது செய்வதற்காக ஜனவரி (27) அவரது வீட்டிற்கு சென்றிருந்த போது, சமன் ஏக்கநாயக்க வீட்டில் இருந்து தலைமறைவாகியிருந்தார்.
பின்னர் சமன் ஏக்கநாயக்க ஜனவரி (28) நீதிமன்றில் ஆஜராகியதையடுத்து அவரை பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சமன் ஏக்கநாயக்க இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ரணிலின் லண்டன் விஜயம் ; விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சமன் ஏக்கநாயக்க நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space