ராகமை பகுதியில் நேற்று சனிக்கிழமை (14) இரவு கேரள கஞ்சாவுடன்  சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 271 கிலோகிராம் 835 கிராம் கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபர் கொழும்பு 14 ஐ வசிக்கும் 34 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவு முன்னெடுத்து வருகிறது.