ரேணுக பெரேராவுக்கு விளக்கமறியல்!
Ad Space
Ad Space
Ad Space
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாகச் செயலாளருமான ரேணுக பெரேராவை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரஹம உத்தரவிட்டுள்ளார்.தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினருமான ரேணுக பெரேரா இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று (17) வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.சட்டவிரோதமான முறையில் பஸ்களுக்கான வீதி போக்குவரத்துக்கான அனுமதிப்பத்திரங்களை வழங்கியமை தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இன்று (17) வியாழக்கிழமை காலை இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட அவரை, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
Ad Space
Ad Space
Ad Space