நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி, நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு எதிர்வரும் ஏப்ரல் 20ஆம் திகதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த 24ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்ட இந்த விவாகரத்து மனுவை ஏற்ற தமிழ்நாட்டின் செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றம், விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கினை குடும்ப நல நீதிமன்றத்துக்கு மாற்றியது.
இந்நிலையில், வருகிற ஏப்ரல் 20ஆம் திகதி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் இந்த வழக்கானது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் இந்த வழக்கில் விஜய் நேரடியாக ஆஜராகவேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கையைச் சேர்ந்த சங்கீதா விஜய்யை காதலித்து 1999ஆம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டார். விஜய், சங்கீதா இருவருக்கும் ஒரு மகனம் ஒரு மகளும் உள்ளனர்.
சினிமாவில் வலம் வந்த விஜய் தற்போது அரசியலிலும் காலடி எடுத்து வைத்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்து, தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், பிரச்சார கூட்டங்களில் அதிகமாக பங்கேற்று வருகிறார்.
இந்த சூழலில் விஜய்யும் சங்கீதாவும் கடந்த இரண்டு வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், தற்போது சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் - ஏப்ரல் 20 வழக்கு விசாரணை!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space