விமான நிலையத்தில் 93 கிலோ ஏலக்காய் தொகையுடன் ஒருவர் கைது!
Ad Space
Ad Space
நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட ஏலக்காய்த் தொகையுடன் சந்தேக நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) இரவு விமான நிலைய பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட சோதனையின்போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து 93 கிலோகிராம் ஏலக்காய் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் கண்டி நாவலப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Ad Space
Ad Space