சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் நேற்று வியாழக்கிழமை (05) கொழும்பு தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொள்ளுப்பிட்டி பகுதியில் கொழும்பு தெற்கு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட விசேட சோதனையின் போதே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 1,500 சிகரெட்டுகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர் 39 வயதுடைய சீன நாட்டுப் பிரஜை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். தற்போது கொள்ளுப்பிட்டி பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீனப் பிரஜை கைது!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space