வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பெருந்தொகையான சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை (08) அதிகாலை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போதே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
சந்தேகநபரிடமிருந்து 34,000 வெளிநாட்டு சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இளைஞர் ஒருவர் கைது!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space