மீகொடை பகுதியில், வீடொன்றில் புகுந்து தங்க நகைகளைத் திருடிய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுமார் 25,50,000 ரூபாய் பெறுமதியுடைய தங்க நகைகளைத் திருடியுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதற்கமைய, நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) மீகொடை பொலிஸாரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் மீகொடை - புவக்வத்தஹேன பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது சந்தேகநபரிடமிருந்து, 04 தங்க நெக்லஸ்கள், 03 தங்க மோதிரங்கள், ஒரு பதக்கம், 18,770 ரூபாய் பணம் மற்றும் தங்க நகைகளை அடகு வைத்த 03 சீட்டுக்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மீகொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
25 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை திருடிய நபர் கைது!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space