பல்வேறு நாடுகளுக்குச் செல்லும் 555 சுற்றுலாப் பயணிகளை ஏற்றி வந்த "எம்.வி. கிரிஸ்டல் சிம்பரி" என்ற ஆடம்பர சுற்றுலா சொகுசு பயணிகள் கப்பல் இன்று திங்கட்கிழமை (23) இலங்கை துறைமுக அதிகாரசபையின் திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது.
இந்தக் கப்பலில் அவுஸ்திரேலியா, இந்தியா, அமெரிக்கா போன்ற பல நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் உள்ளனர்.
திருகோணமலைக்கு வருகை தந்துள்ள இவர்கள் திருகோணமலை, சிகிரியா, ஹபரணை ஆகிய பிரதேசங்களில் உள்ள சுற்றுலாத்தலங்களைப் பார்வையிடத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பஹாமாஸில் பதிவுசெய்யப்பட்ட இந்தக் கப்பலில் 497 பேர் கொண்ட பணியாளர் குழுவினர் உள்ளனர். இக்கப்பல் ஒரு நாள் திருகோணமலையில் தரித்து நிற்க உள்ளது.
கிழக்கு மாகாணத்தின் சுற்றுலா மையமான திருகோணமலைக்கு இந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை,மாகாணத்தின் சுற்றுலாத் துறைக்கு பெரும் ஊக்கமாக அமையும் என சுற்றுலாத் துறைசார் பிரிவினர் எதிர்பார்க்கின்றனர்.
555 சுற்றுலாப் பயணிகளுடன் ‘எம்.வி. கிரிஸ்டல் சிம்பரி’ கப்பல் திருகோணமலை வந்தடைந்தது
Ad Space
Ad Space
Ad Space
Ad Space