சுவிட்சர்லாந்துக்கு வந்த உக்ரைன் அகதி ஒருவருக்கு சுவிட்சர்லாந்தில் வாழ அனுமதி இல்லை என நீதிமன்றம் ஒன்று தெரிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்துக்கு வந்த உக்ரைன் நாட்டவரான பெண்ணொருவர் தனக்கு தற்காலிக பாதுகாப்பு கோரி விண்ணப்பித்திருந்தார்.
ஆனால், அவரது கோரிக்கையை ஏற்க சுவிஸ் மாகாணச் செயலகம் மறுத்துவிட்டது.
பின்னணி
விடயம் என்னவென்றால், அந்தப் பெண் உக்ரைனிலிருந்து இத்தாலிக்குச் சென்றிருந்தார். பின் மீண்டும் அவர் உக்ரைனுக்குத் திரும்பிவிட்டார்.
பின்னர் சுவிட்சர்லாந்துக்கு திரும்பி, அங்கு தனக்கு தற்காலிக பாதுகாப்பு கோரி விண்ணப்பித்துள்ளார் அவர்.
சுவிஸ் மாகாணச் செயலகம் அவரது கோரிக்கையை ஏற்க மறுக்கவே, அவர் ஃபெடரல் நிர்வாக நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.
காரணம் என்னவென்றால், ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றிய அல்லது ஐரோப்பிய தடையில்லா வர்த்தக கூட்டமைப்பு நாடு ஒன்றில் அனுமதிக்கப்பட்ட உக்ரைன் அகதிகள், சுவிட்சர்லாந்தில் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
அந்தப் பெண்ணோ, ரஷ்ய உக்ரைன் போர் துவங்கியதும் இத்தாலிக்குச் சென்றுள்ளார். அங்கு தன் இரண்டு சகோதரிகளுடன் 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை தங்கியதுடன் அங்குள்ள பள்ளியிலும் படித்துள்ளார்.
இத்தாலி அவருக்கு 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை தற்காலிக பாதுகாப்பு வழங்கியுள்ளது.
பின் அவரது சகோதரிகளில் ஒருவர் உக்ரைனுக்குத் திரும்ப, அவருடன் இவரும் உக்ரைன் சென்றுள்ளார். அங்கு போர் தொடர்வது தெரிந்ததும், அவர் மீண்டும் 2025ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், தன் தாயும், சகோதரி ஒருவரும் வாழும் சுவிட்சர்லாந்துக்கு வந்துள்ளார்.
அங்கு தற்காலிக பாதுகாப்பு கோரி விண்ணப்பித்துள்ளார் அவர்.
ஆகவே, சுவிஸ் மாகாணச் செயலகம் அவரது கோரிக்கையை ஏற்க மறுத்துள்ளதுடன், அவரை நாடுகடத்தவும் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றமும் சுவிஸ் மாகாணச் செயலகத்தின் முடிவு சட்டப்படியானதே என்று கூறிவிட்டது.
அகதியாக வந்த பெண்ணை நாடுகடத்தும் சுவிட்சர்லாந்து
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space