அகலவத்தை, தெல்பாவத்தை பகுதியில் கணவனால் தாக்குதலுக்குள்ளாகி மனைவி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (01) இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் தெல்பாவத்தை , மஹாகம பகுதியைச் சேர்ந்த 79 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
குடும்பத் தகராறு காரணமாக இருவருக்குமிடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து, கணவர் கதவின் கைப்பிடியால் தாக்கியதில் இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர், உயிரிழந்த வயோதிப பெண்ணின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக, 84 வயதுடைய சந்தேகநபரான கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அகலவத்தை பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.