வேலையின்மை, வறுமை...
வறட்சி, பஞ்சம், படித்த இளைஞர்கள் மத்தியில் வேலையின்மை அதிகரிப்பு, ஊழல், சமூகத்தில் ஏற்றத்தாழ்வு விரிவடைதல், ஏற்றுமதியில் சீரற்ற நிலை ஆகிய சிக்கல்களை மொராக்கோ கடந்த தசம ஆண்டுகளாக சந்தித்து வருகிறது. விலைவாசி ஏற்றம், அதற்கு ஏற்றார்போல் ஊதிய உயர்வு இல்லை. மக்களின் வாங்கும் சக்தி குறைந்து வறுமையின் பிடியில் சிக்கி, வாழ்க்கையை நடத்துவதில் சிரமங்களை சந்தித்து வருகிறார்கள்.
மொராக்கோ குறித்து சமீபத்தில் உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில், ‘மொராக்கோவில் வேலைவாய்ப்பை உருவாக்காத பொருளாதார வளர்ச்சி இருக்கிறது. வளர்ச்சி இலக்குகளுக்கும், அதன் தொழிலாளர் சந்தையின் உண்மை நிலைக்கும் இடையே இடைவெளி விரிவடைந்து வருகிறது. 2020 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில், 3.70 லட்சத்துக்கும் குறைவான வேலைவாய்ப்புகளே உருவாகின. கிராமப்புறங்களில் பெண்களின் வேலைவாய்ப்பு 19% ஆகக் குறைந்தது, பெரிய அளவிலான பாலின இடைவெளியைச் சந்தித்துள்ளது’ எனத் தெரிவித்தது.
மொராக்கோவில் என்னதான் நடக்கிறது?
Ad Space
Ad Space
வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் இருந்து இரு தினங்களில் மட்டும் ஸ்பெயினின் கட்டுப்பாட்டில் உள்ள சியூட்டா தீவுக்கு ஏறக்குறைய 60,000-க்கும் மேற்பட்ட மக்கள் கடல்வழியாக அகதிகளாக புலம்பெயர்ந்துள்ளனர். அவர்களைத் திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளில் ஸ்பெயின் அரசு தீவிரத்துடன் செயல்பட்டு வருகிறது.
2021-ம் ஆண்டில் இதேபோன்ற அகதிகள் ஊடுருவலை ஸ்பெயின் அரசு சந்தித்தது. ஆனால், முன் எப்போதும் இல்லாத இந்த அளவு அகதிகளின் சட்டவிரோத வருகையைப் பார்த்து திகைத்து நிற்கிறது. இதனால், எல்லைப் பகுதியில் கூடுதல் பாதுகாப்புப் படைகளை ஸ்பெயின் நிறுத்தியுள்ளது.
சியூட்டா, மெலிலா தீவுகள் 1580-ம் ஆண்டு முதல் ஸ்பெயினின் கட்டுப்பாட்டில்தான் இருந்து வருகிறது. ஆனால், இந்த தீவுகளை உரிமை கோரி மொராக்கோ தற்போது ஸ்பெயினுடன் மோதலில் ஈடுபட்டு வருகிறது. ஏற்கெனவே ஸ்பெயின் - மொராக்கோ இடையே தூதரக உறவுகளில் உரசல் இருந்து வரும் நிலையில், இந்த புலம்பெயர்வு மீண்டும் விவாதங்களைக் கிளறியுள்ளது.
கடும் கோபத்தில் இத்தாலி
சியூட்டாவின் தாராஜல் கடற்கரையில் அரங்கேறும் காட்சிகள் ஸ்பெயின் மற்றும் இத்தாலிக்கு இடையே அரசியல் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்தின் விசா இல்லாத ‘ஷெங்கன்’ பயணப் பகுதியிலிருந்து ஸ்பெயினை சஸ்பெண்ட் செய்யுமாறு இத்தாலி வலியுறுத்தியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் தெற்கு நுழைவுவாயில் ஸ்பெயின். இங்கு நுழையும் அகதிகள், படிப்படியாக ஐரோப்பா முழுவதும் பரவி விடுவார்கள் என்ற அச்சத்தை இத்தாலி வெளிப்படுத்தியுள்ளது. மேலும், மிகப் பெரிய அளவிலான மக்கள் புலம்பெயர்வு என்பதால் ஒட்டுமொத்த ஐரோப்பிய யூனியனின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மொராக்கோவில் என்னதான் நடக்கிறது?
வட ஆப்பிரிக்காவின் மெக்ரிப் மண்டலத்தில் உள்ள 3.50 கோடி மக்களைக் கொண்ட சிறிய நாடுதான் மொராக்கோ. பொருளாதார வளர்ச்சியில் வட ஆப்பிரிக்காவில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தை மொராக்கோ கொண்டிருந்தாலும், கடந்த சில ஆண்டுகளாக சிக்கலான நிலையில் இருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை 5.5 சதவீத வளர்ச்சியில் இருந்த மொராக்கோ நடப்பு ஆண்டில் 3 சதவீதத்தை பராமரிப்பது கடினம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
Ad Space
Ad Space