கோவை பெரியார் நூல​கத்​தைத் தொடர்ந்து சென்னை அண்ணா நூற்​றாண்டு நூல​கம் மற்​றும் மதுரை கலைஞர் நூற்​றாண்டு நூல​கத்​திலும் புத்​தகங்​கள் கொள்​முதலில் ஊழல் குற்​றச்​சாட்​டுகள் எழுந்​துள்​ளன.

கடந்த திமுக ஆட்​சிக் காலத்​தில் கோவை​யில் ரூ.300 கோடி செலவில் பெரியார் அறி​வுல​கம் நூல​கம் பிரம்​மாண்​ட​மாக கட்டி முடிக்​கப்​பட்​டது. ஆட்சி மாற்​றம் ஏற்​பட்ட நிலை​யில் நீண்ட நாட்களாக அந்த நூல​கம் திறக்​கப்​பட​வில்லை. இந்​நிலை​யில், கடந்த அக்​டோபர் 13-ம் தேதி முதல்​வர் விஜய் கோவை பெரியார் அறி​வுல​கம் நூல​கத்​தைத் திறந்து வைத்​தார். இந்​நிலை​யில் பெரியார் நூல​கத்​துக்​குப் புத்​தகங்​கள் கொள்​முதல் செய்யப்பட்டதில் ஊழல் நடந்​திருப்​ப​தாக எழுத்​தாளர் பெரு​மாள் முருகன் சமூக வலை​தளத்​தில் குற்​றச்​சாட்டு எழுப்​பினார்.

இது​தொடர்​பாக அவர் வெளி​யி்ட்ட கட்​டுரையில், “போலி பதிப்பகம், போலி சர்​வ​தேச தர புத்​தக எண்​கள் (ஐஎஸ்பிஎன்) கொண்ட நூல்​கள் கொள்​முதல் செய்​யப்​பட்​டுள்​ளன. அதிலும் அகல்​ விளக்கு, பீனிக்ஸ் போன்ற பதிப்​பகங்​கள் வெளி​யிட்ட நூல்கள்​தான் அதி​க​மாக உள்​ளன” என்று குறிப்​பிட்​டிருந்​தார்.

கொள்​முதல் விவகாரம் தொடர்​பாக ஆளும் கட்​சி​யும், எதிர்க்கட்சியான திமுகவும் ஒரு​வர் மீது ஒரு​வர் மாறி மாறி குற்றச்சாட்​டுகளை முன்​வைத்து வரு​கின்​றனர். நூல்​கள் கொள்​முதல் தொடர்​பாக அரசு விசா​ரணைக்கு உத்​தர​விட வேண்​டும் என்று அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் வலியுறுத்தி வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில், சென்னை கோட்​டூர்​புரத்​தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூல​கம் மற்​றும் மதுரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நூல​கத்​திலும் நூல்​கள் கொள்​முதலில் ஊழல் நடந்திருப்​ப​தாக புகார்கள் எழுந்துள்ளன.