அன்னைபூபதி அம்மாவின் 38ஆம் ஆண்டு நினைவு தின அஞ்சலி நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (05) , வலி வடக்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தொகுதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வு வலி வடக்கின் உறுப்பினர் குலத்துங்கம் வில்வராசா தலைமையில் நடைபெற்றது.
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஈகைச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினார்.
வலி வடக்கின் பிரதேச சபை உறுப்பினர் தயானி சந்திரன் அவர்கள் மலர் மாலையை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில் சபையின் உறுப்பினர்கள், கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்டு மலர் தூவி தங்களது அஞ்சலியை செலுத்தினர்.
அன்னை பூபதி அம்மாவின் தியாகப் பாதை என்றும் தமிழர் மனங்களில் நிலைத்திருக்கும்.