அமெரிக்காவின் அதிநவீன ஆளில்லா நீர்மூழ்கியை தாக்கிக் கைப்பற்றியது ஈரான்!
Ad Space
Ad Space
Ad Space
அமெரிக்காவின் அதிநவீன ஆளில்லா நீர்மூழ்கியை ஹோர்முஸ் நீரிணையின் நுழைவுப் பகுதியில் வைத்துத் தங்கள் புரட்சிகரக் காவல் படை (IRGC) கைப்பற்றியதாக ஈரான் செவ்வாய்க்கிழமை (8) அறிவித்துள்ளது.இந்த ட்ரோன் பிராந்திய கடற்பகுதியில் ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஒரு நாளுக்கும் மேலாக இயங்காமல் கோளாறடைந்ததாக அமெரிக்கப் பாதுகாப்புத் தலைமையகமான பெண்டகன் தெரிவித்துள்ளது.கைப்பற்றப்பட்ட நீர்மூழ்கி, கலிபோர்னியாவின் 'அண்டுரில்' (Anduril) என்ற பாதுகாப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட Dive-LD என்ற பெரிய ரகத் தன்னாட்சி நீர்மூழ்கியாகும். (Autonomous Underwater Vehicle).19 அடி (5.8 மீட்டர்) நீளம் கொண்ட இந்த நீர்மூழ்கியால் தொடர்ந்து 10 நாட்கள் வரை இயங்க முடியும்.கடலடி கண்ணிவெடிகளைக் கண்டறிதல், கடற்பரப்பை வரைபடமாக்குதல், உளவுத் தகவல்களைச் சேகரித்தல் மற்றும் கடலுக்கு அடியில் உள்ள கேபிள்கள் / குழாய்களைப் பரிசோதித்தல் போன்ற பணிகளை இது மேற்கொள்ளும்.இராணுவ நடவடிக்கைகளின்போது நீருக்கடியிலான ட்ரோன்கள் பயன்படுத்தப்படும் விதத்தை இதனூடாக கண்டறிய முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
Ad Space
Ad Space
Ad Space