நேபாளம் அருகே 5.3 ரிச்டர் அளவு பூமியதிர்ச்சி!
Ad Space
Ad Space
Ad Space
பேரழிவு தந்த வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளின் சுவடுகள் மறைவதற்குள், நேபாளத்தின் வடமேற்கு முஸ்தாங் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (08) இரவு 5.3 ரிச்டர் அளவிலான சக்திவாய்ந்த பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு தேசிய பூமியதிர்ச்சி கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.இரவு 9:53 மணியளவில் ரிச்டரில் 5.3 ஆகப் பதிவான இந்த பூமியதிர்ச்சியின் மையம் முஸ்தாங் மாவட்டத்தின் லோமந்தாங் பகுதியில் அமைந்திருந்ததாக நேபாள தேசிய பூமியதிர்ச்சி கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.மணாங், தோல்பா மற்றும் மியாக்டி மாவட்டங்களிலும் இந்த அதிர்வுகள் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.அதிர்ஷ்டவசமாக பூமியதிர்ச்சியினால் உடனடி உயிரிழப்புகளோ அல்லது கட்டமைப்புச் சேதங்களோ ஏற்பட்டதாகச் செய்திகள் எதுவும் வெளியாகவில்லை.அண்மையில் ரசுவா வெள்ளப்பெருக்கிலிருந்து மீண்டு வரும் சூழலில், இந்த பூமியதிர்ச்சி மேலும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.மற்றுமொரு கவலைக்கிடமான நிகழ்வாக, கண்டகி மாகாணத்தின் பர்பத் மாவட்டத்தில் பாயும் கிம்ருங் ஆறு மண்சரிவு காரணமாக அடைபட்டு செயற்கை ஏரி போல உருவாகியுள்ளது.மோடி ஆற்றின் கிளையாறான கிம்ருங் ஆற்றில் ஏற்பட்டுள்ள இந்த அடைப்பு திடீரென உடைந்தால் பெருவெள்ளம் ஏற்படும் ஆபத்து உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.நயாபுல், பிரேதாந்தி மற்றும் அதனைச் சுற்றியுள்ள தாழ்வான கரையோரப் பகுதி மக்கள் உடனடியாகப் பாதுகாப்பான உயரமான இடங்களுக்குச் செல்லுமாறு வெள்ள முன்னறிவிப்புப் பிரிவு மற்றும் பொலிஸார் ஒலிபெருக்கிகள் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.காளிகண்டகி ஆற்றின் சங்கமம் வரை வாழும் பொதுமக்கள் அனைவரும் மிக உயர்ந்த முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
Ad Space
Ad Space
Ad Space