அமெரிக்காவில் பல மணிநேரங்களாக நீடித்த விமானப் போக்குவரத்து முடக்கம் நீக்கப்பட்டதுடன் விமானங்கள் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்காவின் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையங்களில் ஏற்பட்ட “தகவல் தொடர்புச் சிக்கல்” காரணமாக, நாடு முழுவதும் புறப்படவிருந்த விமானங்கள் நேற்று (13) நான்கு மணி நேரத்திற்கும் மேலாகத் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தன.
இந்தத் தடையை அமெரிக்காவின் ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) நீக்கியுள்ளது.
இருப்பினும், சேவைகள் முழுமையாக இயல்பு நிலைக்குத் திரும்ப சில காலம் ஆகும் என அமெரிக்கப் போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.