பயங்கரவாதத்தடைச்சட்டத்துக்குப் பதிலீடாக அரசாங்கத்தினால் புதிதாக முன்மொழியப்பட்டிருக்கும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகார சேவைப்பிரிவின் ஆசிய, பசுபிக் பிராந்தியத்துக்கான பதில் முகாமைத்துவப் பணிப்பாளர் பாவோலா பம்பலோனி தீவிர கரிசனையை வெளிப்படுத்தியிருப்பதாக அறியமுடிகிறது.
ஐரோப்பிய ஒன்றியம் - இலங்கை கூட்டு ஆணைக்குழுவின் 27 ஆவது கூட்டத்தில் பங்கேற்பதற்காக கடந்த வாரம் நாட்டுக்கு வருகைந்த ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகார சேவைப்பிரிவின் ஆசிய, பசுபிக் பிராந்தியத்துக்கான பதில் முகாமைத்துவப்பணிப்பாளர் பாவோலா பம்பலோனி தலைமையிலான அதிகாரிகள் குழுவினர், இங்கு பல்வேறு தரப்பினருடன் சந்திப்புக்களில் ஈடுபட்டிருந்தனர்.
குறிப்பாக அரசாங்கத்தரப்புக்கு அப்பால், எதிர்க்கட்சித்தலைவர், தமிழ்ப்பிரதிநிதிகள், மலையகப் பிரதிநிதிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பல்வேறு தரப்பினருடனும் நடைபெற்ற சந்திப்புக்களின்போது குறிப்பாக அரசாங்கத்தினால் புதிதாக முன்மொழியப்பட்டிருக்கும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு குறித்து விரிவாகப் பேசப்பட்டதாக தெரியவருகிறது.
அதுமாத்திரமன்றி இச்சட்ட வரைவின் உள்ளட்டக்கம் பற்றிக் கேட்டறிந்த பாவோலா பம்பலோனி, அதன் பாரதூரத்தன்மை குறித்து தீவிர கரிசனையை வெளிப்படுத்தியதாகவும் அறியமுடிகிறது.
அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு: பாரதூரத்தன்மை குறித்து ஐரோப்பிய ஒன்றிய அதிகாரி தீவிர கரிசனை
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space