அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்திருந்த தொழிற்சங்க நடவடிக்கை இன்று திங்கட்கிழமை (06) காலை 08.00 மணி முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அரசியல் தலையீடுகளின் அடிப்படையில் வைத்தியர்களின் இடமாற்றங்களை முன்னெடுப்பதை நிறுத்துதல் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்பகிஷ்கரிப்பு ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

இந்த விடயம் தொடர்பான பிரச்சினைகளை கலந்துரையாடுவதற்கு எதிர்வரும் வியாழக்கிழமை சுகாதார அமைச்சருடன் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதால், போராட்டத்தை தற்காலிகமாக கைவிட தீர்மானித்ததாக சங்கத்தின் செயலாளர் வைத்தியர் பிரபாத் சுகததாச தெரிவித்தார்.

தற்போது வெளிநாடு சென்றுள்ள சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நாடு திரும்பியதும் குறித்த பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.