ஆசிய பல்கலைக்கழகங்களுக்கான 2027ஆம் ஆண்டுத் தரவரிசையில் இலங்கையின் 12 பல்கலைக்கழகங்களில் 8 பல்கலைக்கழகங்கள் பின்னடைவைச் சந்தித்துள்ளதாக குவாக்கரெல்லி சைமண்ட்ஸ் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
குவாக்கரெல்லி சைமண்ட்ஸ் நிறுவனம் வெளியிட்ட தரவரிசையின்படி, கொழும்பு பல்கலைக்கழகம் 46 இடங்கள் பின்தங்கி 364ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.
பேராதனை மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகங்கள் முறையே 389, 398ஆவது இடங்களைப் பெற்றுள்ளன.
அத்தோடு மொரட்டுவை பல்கலைக்கழகம் 37 இடங்களும், களனி பல்கலைக்கழகம் 44 இடங்களும் முன்னேறியுள்ளன.
எனினும், தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக ஆசிய அளவில் இலங்கையின் முதன்மைப் பல்கலைக்கழகமாக கொழும்பு பல்கலைக்கழகம் திகழ்கிறது. ஆசிய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான அதிகரித்த போட்டியே மேற்குறித்த பின்னடைவுக்கு முக்கிய காரணம் என நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.