நாட்டின் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
அம்பாறை - அக்கரைப்பற்று, கல்முனை பிரதான வீதியின் அட்டாளைச்சேனை பகுதியில், இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை (08) காலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
கல்முனை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, முன்னால் சென்ற முச்சக்கரவண்டியை முந்திச்செல்ல முயன்றபோது, கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும், பின்னால் பயணித்தவரும் அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது, பின்னால் பயணித்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் அட்டாளைச்சேனை பகுதியை சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை, மின்னேரியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹபரணை - மட்டக்களப்பு வீதியின் ரஜஎல பகுதியில், மோட்டார் சைக்கிள் பஸ்ஸில் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை (08) இரவு இந்த விபத்து பதிவாகியுள்ளது.
பொலன்னறுவை நோக்கி பயணித்த பஸ் ஒன்று, மோட்டார் சைக்கிளை முந்திச் செல்ல முயன்ற போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இதன்போது காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும், பின்னால் பயணித்தவரும் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மோட்டார் சைக்கிளின் பின்னால் பயணித்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் அட்டாளைச்சேனை பகுதியை சேர்ந்த 20 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இரு வேறு விபத்துக்களில் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த இரு இளைஞர்கள் பலி!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space