சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு காலி முகத்திடல் இருந்து  Ride Colombo 2026 - சைக்கிள் சவாரி சனிக்கிழமை (07)  இடம்பெற்றது.

சைக்கிள் சவாரியில் உள்நாட்டு வெளிநாட்டு மற்றும் விமானப்படை, கடற்படை பெண்கள் உட்பட 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த மகளிர் சைக்கிள் சவாரி காலிமுகத்திடலில் இருந்து ஆரம்பித்து சிலேவ் ஜலன்ட் ஊடாக 20 கிலோமீட்டர் மற்றும் 10 கிலோமீட்டர் என வலம் வந்தார்கள்.

அத்துடன் காலிமுகத்திடலில் போடப்பட்டிருந்த சிவப்பு விரிப்பு ஊடாக அவர்களுக்கு வெற்றி பதக்கம் அணிவிக்கப்பட்டு பரிசுல்களும் ஏற்பாட்டாளர்கள் மற்றும் அனுசரனையாளர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

நாட்டின் பல பாகங்களிலிருந்து பெண்களை ஒற்றுமை, வலிமை, மற்றும் நோக்கமுள்ள உறுதிப்பாட்டுடன் ஒன்றிணைவோம் என இத்திட்டத்தின் ஸ்தாபகர் தெரிவித்தார்.

இவ் ஆண்டின் தைரியமான மற்றும் ஊக்கமூட்டும் கோஷம் என் சவாரி என் குரல் மாற்றத்தின் சக்கரம் ” என்பது ஆழமான சமூக இயக்கத்தை வெளிப்படுத்துகின்றது.

ரைட் கொழும்பு 2026 என்பது வெறும் மிதிவண்டி சவாரி நிகழ்வு அல்ல ஒவ்வொரு பெண்ணும் தன்னம்பிக்கையுடன் சவாரி செய்யும் தனது குரலை பகிரவும் இலங்கையின் முன்னேற்றத்தை முன்னெடுக்கும் மாற்றச் சக்கரத்தின் அங்கமாக மாறவும் உருவாக்கப்படட் தளமாகும்.
Geographic Reference