இலங்கைக்கு கிடைத்த தரப்படுத்தல் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தை வெளிப்படுத்துகிறது
Ad Space
Ad Space
வேறு நாடுகளுடனான கொடுக்கல் வாங்கல், பண பரிவர்த்தனை முறைமை, தேசிய பணவீக்கம் உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இலங்கை உயர் - நடுத்தர வருமானம் பெறும் நாடாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்தை வெளிப்படுத்துகிறது என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளியல் பீட பேராசிரியர் வசந்த அதுகோரல தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
இலங்கை 1996 ஆம் ஆண்டுவரை குறைந்த வருமானம் பெறும் நாடாக காணப்பட்டது.1997 -2017 ஆம் ஆண்டுவரை குறைந்த நடுத்தர வருமானம் பெறும் நாடாக காணப்பட்டது.
2018 ஆம் ஆண்டு உயர் நடுத்தர வருமானம் பெறும் நாடாக காணப்பட்ட நிலையில், 2019 ஆம் ஆண்டு குறைந்த வருமானம் பெறும் நாடாக அடையாளப்படுத்தப்பட்டது.2019 முதல் 2024 ஆம் ஆண்டு வரை குறைந்த வருமானம் பெறும் நாடாக அடையாளப்படுத்தப்பட்டிருந்த நிலையில்,
கடந்த ஆண்டு நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி 108 பில்லியன் டொலராக உயர்வடைந்து, தனிநபர் வருமானம் ஒப்பீட்டளவில் அதிகரிக்கப்பட்டது.
இவ்வாறான பின்னணியில் உலக வங்கியானது இலங்கையை தற்போது உயர் நடுத்தர வருமானம் பெறும் நாடாக அடையாளப்படுத்தியுள்ளது.
உலக வங்கியானது 'எட்லஸ்' முறைமையை அடிப்படையாகக் கொண்டு இலங்கையை உயர் -நடுத்தர வருமானம் பெறும் நாடாக அடையாளப்படுத்தியுள்ளது.
வேறு நாடுகளுடனான கொடுக்கல் வாங்கல், பண பரிவர்தனை முறைமை, தேசிய பணவீக்கம் உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இலங்கை உயர் - நடுத்தர வருமானம் பெறும் நாடாக மதிப்பிடப்பட்டுள்ளது.இது இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்தை வெளிப்படுத்துகிறது என்றார்.
Ad Space
Ad Space